பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்தான் வரும் இன்பம் 45

வான். பிறர் ஆக்கங்கண்டு நெஞ்சழியும் நேர்மையற்ற நிலையே அவன்மாட்டுக் காணப்படும். எனவே அழுக்காறு அணுவளவில் அகத்தில் குடியிக்க வேண்டா என வள்ளுவர் குறிப்பிடுகின்றார். அனைத்துத் துன்பங் களுக்கும் காரணம் அவா.வே. அவா நீங்கினால் துன்பம் துடைக்கப்பட்டு இன்பம் பிறத்தல் இயற்கை.

‘ஆரா இயற்கை அவாப்ேபின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்’ -திருக்குறள் : 370 என்று பிறிதோரிடத்தில் திருவள்ளுவர் தெளிவுறுத்து கிறார். குணமென்னுங் குன்றேறி நின்றாரும் வெகுளி கணமேயும் காத்தல் அரிதாம். எனவே வெகுளி வேண்டப் படாது கடியப்பட வேண்டுவதாகும். இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்த செயலாகும். எனவே இன்னாச்சொல்லுக்கு இடமற்ற வாழ்வே நல்லது: உறுதிபயப்பது. எனவேதான் இந்நான்கு பண்புகளும் சாராத பண்பே அறம் எனத் திறமாகச் சொல்கிறார் திருவள்ளுவர்.

வீட்டில் விருந்து போற்ற அரிசியில்லா நிலையிலும் விளைநிலத்தில் வித்திய நெல்லைக் கொணர்ந்து அடியவர்க்கு விருந்து போற்றிய இளையான் குடி மாற நாயனார் அறத்தின்பாற் கொண்ட பற்றுதான் எத்துணை வியப்பிற்குரியது; இறுதி மூச்சு பிரியும் நிலையிலும் தான் இதுகாறும் திரட்டிய அறத்தின் பயனைக் கண்ணபிரானுக்குக் கொடையாக நல்கிய கன்னனின் அறப்பற்றுதான் எத்துணை விழுமியது!

எனவே உலகிற் பிறந்த ஒவ்வொருவரும் தம்மா லியன்ற அளவு அறம் செய்ய வேண்டுமென உறுதி பூண வேண்டும். காசி ரகசியம்’ என்ற நூலும் வள்ளுவர் வழி நின்று அறனைப் பின்வருமாறு வலியுறுத்துகின்றது.