பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நல்லோர் நல்லுரை

‘சிறுபொருள் கைக்கொண் டோடும் செயத்தகு தருமஞ் செய்தால் உறுபொருள் கைக்கொண் டோர்செய் அறத்தினும் உயர்ந்து தோன்றும் உறுபொருள் கைக்கொண் டோரும்

உயர்வுறுந் தருமஞ் செய்யிற் சிறுபொருள் கைக்கொண் டோர்செய்

அறத்தினும் சிறிதாத் தீரும்.’

இன்சொல்லை விளைநிலமாக உவமித்து, ஈதலை வித்தாக்கி, வன்சொல்லைக் களைகளாக்கி, அவை களைந்து வாய்மையினை எருவாக்கி, அன்பை நீராக்கி, அறக்கதிர்களை விளைவித்துக் கொள்ள வேண்டும் என்று அறநெறிச் சாரம் அறிவிக்கின்றது.

‘இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக வன்சொற் களைகட்கு வாய்மை எருவட்டி அன்ஸ்ரீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனுமோர் பைங்கூழ் சிறுகாலைச் செய்.’

மேலும் அறம் செய்வதில் தயக்கமோ காலம் தாழ்த்தலோ நாளைக்கு என ஒத்திவைத்தலோ இருக்கக் கூடாது. ‘இப்போது இளமைப் பருவந்தானே! அறத்தைப் பற்றி அணுவளவும் கவலைப்படாமல் நன்கு ‘இளமையை ஆரத்துய்த்துவிட்டு, முதுமைக் காலத்தில் அறத்தைப் பற்றிக் கொள்ளலாம்” என்று வாளாயிருத்தல் கூடாது. இவ்வாறு உயிர்க்கு இறுதிநேரும்பொழுது அறஞ்செய்து துறக்கம் புகலாம் என நினைத்து ஏமாந்த ஒருவன் கதையைச் சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கதேவர் நயம்படக் கிளத்தியுள்ளார்.