பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்தான் வரும் இன்பம் 47

சாகுங்காலத்து அறஞ்செய்யலாமெனத் திட்டமிட்ட ஒருவன் வாழ்வில் எதிர்பாராது இறுதி வந்து விடுகிறது. பேச்சு அடைபட்டு விட்டது. உயிர் அகத்ததோ புறத்ததோ எனும் நிலை. உறவினர் அவன் படுக்கையைச் சுற்றிக் கூடிவிட்டனர். அவன் மனைவியைப் பார்த்துச் சைகையால் தான் திரட்டிய பொருளைக் கொண்டுவரச் சொன்னான். அவளோ ஒன்றுமறியாதவள்போல “ஐயோ என் கணவர் விளாம்பழம் கேட்கின்றாரே! அதற்கு இது பருவம் இல்லையே’ என்று அழுதாளாம். அவ்வெல்லை யில் அவன் உயிரும் பறந்து விட்டதாம்.

‘கையாற் பொதித்துணையே காட்டக்

கயற்கண்ணாள் அதனைக் காட்டாள் ஐயா விளாம்பழமே என்கின்றீர்

ஆங்கதற்குப் பருவம் அன்றுஎன் செய்கோ எனச்சிறந்தாள் போல்சிறவாக்

கட்டுரையாற் குறித்த வெல்லாம் பொய்யே பொருளுரையா முன்னே

கொடுத்துண்டல் புரிமின் கண்டீர்.”

-கேமசரியார் இலம்பகம் : 1553. இதனையே சிலம்பில் இளங்கோவடிகளும்,

‘நாளைச் செய்வம் அறமெனில் இன்றே வேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்’

என்று குறிப்பிட்டார். எனவே அறந்தான் ஒருவர்க்கு அழிவு வருங்காலத்திலும் அழியாத் துணையாக நிற்ப தாகும் என்ற கருத்தைத் திருவள்ளுவர்,

‘அன்றறிவாம் என்னாது அறம் செய்க; மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை’ -திருக்குறள் : 35

என்றார்.