பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

"இன்று கொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது பின்றையே நின்றது கூற்றம்" என்பர் பெரியோர். ஆகவே தான் இளங்கோவடிகளும்,

        "இதுவென வரைந்து வாழ்நாள் உணர்ந்தோர் 
         முதுநீர் உலகின் முழுவதும் இல்லை 
   என்றார். இத்தகைய நிலையாகக் கொண்ட வாழ்க்கையில் நிலையாக நிலைத்து நிற்பது அறம் ஒன்றே யாகும். அறமே ஆண்டவனின் சட்டம் எனலாம். எனவே மக்களின் ஒழுகலாறு அறத்தின் திறத்தில் அமைந்திருக்க வேண்டும்.
   ஆயினும் ஒரு கருத்து உலகில் பொதுவாய் நிலவு கின்றது. அதாவது முற்பிறவியில் அறம் செய்தவர்களே இப்பிறவியில் செல்வராயும், அறம் செய்யாதவர்களே ஏழையராகவும் உள்ளனர் என்ற கருத்தே ஆகும் அது. இக்கருத்து, திருவள்ளுவர்க்கு உடன்பாடான கருத்து அன்று. இக்கருத்து உண்மையாயின் இன்று ஆடம்பர மான காரில் செல்வோரெல்லாம் அறம் செய்தவர் களாகவும் அல்லாதோரெல்லாம் அஃது ஆற்றாத பாவி யராகவும் கொள்ளப்படுவர். உண்மை இவ்வாறு அன்று என்பதனை எடுத்துக்காட்டவே திருவள்ளுவர், பல்லக்கைச் சுமப்பவன், ஊர்பவன் இவர்களிடையே, அவன் அறம் செய்யாத காரணத்தால் சுமக்கின்றான் என்றும், அவன் அறம் செய்த காரணத்தால் ஊர்கின்றான் என்றும் அறத் தின் பயனை அளந்து கூற வேண்டா என்கின்றார்.
            "அறத்தாறு இதுவென வேண்டா; சிவிகை     
             பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை”
                                                    -- திருக்றகுள் : 37