பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்தான் வரும் இன்பம் -- 49

‘அகத்தே எண்ணும் எண்ணங்களின் துாய்மை யாலும், நெஞ்சின் இன்ப துன்ப உணர்வுகளாலும் அறத்தை அறியக்கூடுமே அல்லாமல், புறத்தே உள்ள உயர்வு தாழ்வுகளால் அறிய முடியாது’ என்பது ஆன்றோர் தரும் விளக்கமாகும்.

‘பல்லக்கைத் தாங்கிச் செல்வோரும் மனிதரே. அதில் ஏறிச் செல்வோரும் மனிதரே. இருவரும் ஒரு வழியில் பிறந்தவரேயாவர். இருவரும் தொழின் முறையில் ஈடுபட்டவரே ஆவர். அறநெறி தொழிலிடைப் பொது வாயிலங்குவது. அறநெறி, பல்லக்கைத் தாங்கலில் சுருங் கியும், அதில் செல்கையில் பெருகியும் நிற்பதோ? இல்லை. பல்லக்கைச் சுமந்து செல்வோரும் அறநெறி நின்றால் அறவோர் ஆகலாம். பல்லக்கில் ஊர்ந்து செல்வோரும் அறநெறி நின்றால் அறவோர் ஆகலாம். அறவோராகும் வாய்ப்பு இருவர்க்கும் உண்டு, ஒருவர்க்கு மட்டும் அவ் வாய்ப்பில்லை. அறத்தாறு ஒருசாரார் பக்கம் சாயும் தன்மையுடையதன்று’ என்றும் ஆசிரியர் திரு. வி. க. அவர்கள் திருக்குறள் விரிவுரையில் விளக்குதல் காண்க.”

செல்வம் பெற்றோர் மட்டும் சிந்தையில் இன்பமும் அமைதியும் உற்று வாழ்வர் என்று சொல்லிவிட முடியாது. அரியணை வாழ்வில் அமைதியிழந்து அமைந்தவரும் உண்டு; அன்றாடங் காய்ச்சி எனும் அவல நிலையுள்ள வாழ்விலும் அமைதியும் மகிழ்வும் பூத்துக் குலுங்க வாழ் வோரும் உண்டு. எனவே பிறர்க்குப் பயன்படும் வாழ்க்கை வாழ்வோர்-தனக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெரியோர்-வறியராயினும் அவர் பிறர்க்குரி யோராவர். செல்வத்தை மலையெனக் குவித்து நடுவூருள் நச்சுமரமாய் வாழும் வாழ்வினர் அச்செல்வத்தைப்