பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நல்லோர் நல்லுரை

போற்றிக் காப்பதிலேயே தம் வாழ்வின் பெரும் பகுதி யினை வறிதே செலவிடுவர். -

‘ஈட்டலுங் துன்பம் மற்று ஈட்டிய வொண்பொருளைக்

காத்தலு மாங்கே கடுந்துன்பம் காத்தல் குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்புக்கு உறைபதி மற்றைப் பொருள்’

என்று நலமுற நவிலும் நாலடியார்ப் பாட்டு.

எனவே அறத்தின்வழிச் செல்வதொன்றே மனச் சான்றை மகிழ்விக்கும் திறன் படைத்தது என்று நாம் தேர்தல் வேண்டும். மனச்சான்றைக் கொன்று ஒருவன் இன்பம் துய்த்தல் என்பது ஏலாத செயலாம். மனச் சான்றின் மகிழ்ச்சியே உண்மையான இன்பத்திற்கு உறைவிடமாகும். மனச்சான்றை மறுத்து ஒருவன் ஐம்புல இன்பங்களைத் துய்த்தல் என்பது இயலாத செயலாகும். மனச்சான்று ஒருவனைப் பார்த்துச் சுட்டால், குற்றஞ்சாட்டினால், எள்ளி நகையாடினால் எந்த இன்பமும் வாய்த்தல் அருமையாகிவிடும். எனவே, அறத்தான் வருவதே இன்பமாகும். அஃதே உண்மை யான இன்பமாகும். மற்றவை யெல்லாம் மேலுக்கு இன்பமாகத் தோன்றினும் உள்ளுக்குள் ஒருவன் உள்ளத்தை அது துன்பமாக அமைந்தே தொந்தரவு செய்து கொண்டிருக்கும். அவை போலி இன்பமாகவே அமையும்;அவற்றால் எய்தக் கூடிய புகழும் இல்லை.

‘அறத்தான் வருவதே இன்பம்; மற்றெல்லாம்

புறத்த புகழும் இல.”

- திருக்குறள் : 39.

இதனை விநாயக புராண ஆசிரியர்,