பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கூற்றெதிர்க்கும் படை

1

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்கிற்கும் ஆற்ற லதுவே LJóð) L— -திருக்குறள் : 765

திருவள்ளுவர் ஒரு தெய்வப் புலவர். அவர் முப்பாலில் மொழிந்தன எல்லாம் தப்பாமல் இன்றும் இந்நிலையிலும் பொருந்துவனவாக விளங்குவதனைக் காணலாம். திருவள்ளுவரின் பொருட்பாலினைப் படிக் கும்போது அவர் அரசியல் ஞானியாக விளங்கும் திறத் தினைக் கண்டு தெளியலாம்.

முதற்கண், ஒரு நல்ல நாட்டினை நம் கண்முன் கொண்டுவந்து காட்டுகின்றார். உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராதியல்கின்ற நாட்டைச் சொல்லி, அந்நாட்டினைக் காக்கும் நல்லதோர் அரண் பற்றி அடுத்து மொழிந்து பொருள்செய் வகையின் நுட்பம் கூறிப் பின்னர், கண்களைக் காக்கும் இமைகள் போல் அந்நாட்டினைக் காக்கும் படையின் மாட்சியினை எடுத்து மொழிகின்றார்.

தனி மனித வாழ்வில் தனக்குத் தீங்கு செய்தாரையும் பொறுத்துப் போகவேண்டும் என்று கூறிய திருவள்ளுவர். பொதுவாழ்வினை - பொதுக்கடமையினை அரசனுக்கு வற்புறுத்தும் பொழுது, தீங்கு செய்தாரைத் தண்டிக்கும்