பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூற்றெதிர்க்கும் படை 53

திறனை ஆட்சித் தலைவன் பெறவேண்டும் என்று கூறு கிறார். ஆட்சியின் அமைதிக்கு இடையூறாக, மக்கள் வாழ்வதற்கு மருட்சியூட்டுபவராகப் பகைவர் வழிவகை காண்பரேயானால், அவர்கள் குறும்பினை யடக்கி யொடுக்குதல் அரசனது படையின் பணியாகும் என்று குறிப்பிட்டு, அத்தகு ஆற்றல் சான்ற படையின் மாட்சி யினை-பெருமையினைப் படைமாட்சி எனும் அதிகா ரத்தால் விளக்குகின்றார். * - -

படை தனக்கு அமைய வேண்டிய உறுப்புகள் எல்லாம் அமைந்து, ஏற்படும் எத்தகைய இடையூறு களுக்கும் அஞ்சாமல், எடுத்த கடமையில் என்றும் வெற்றியே பெறும் திறத்ததாக இருக்க வேண்டும். அப்படையே அரசனின் அழியாத செல்வம் என்று திருவள்ளுவர் குறிப்பிட்டுவிட்டுப் பின்னர் படையின் இலக்கணத்தைப் பாங்குற மொழியத் தலைப்படுகின்றார். நம் வாழ்நாள் மேற்சென்று, நம் வாழ்நாள் வழியினை அறுத்து நிற்கும் ஒற்றனை முன்னோர் கூற்றுவன் என்ற சொல்லால் வழங்கினர். வாழ்வினைக் கூறுபகுப்பவன், துண்டாடுபவன் என்ற பொருளில் கூற்றுவன்’ என்ற சொல் அமைந்தது. அவ்வாறு உடற் கூட்டினின்று உயிரை ஈவு இரக்கமின்றிப் பறித்துச் செல்லும் எமனே கோபங் கொண்டு கொதித்து வந்தாலும், ஒற்றுமையாகக் கூடி, அவ் எமனுக்கு எதிரிலே அஞ்சாது நிற்பதோடு, அவ் எமனையும் புறங் கண்டு வெற்றி பெறும் ஆற்றல் அரசனது படைக்கு அமைய வேண்டும் என்று அமைவுறக் கூறுவார் திருவள்ளுவர்.

திருவள்ளுவர் கூறும் இத்தகைய அரிய படைமாட்சி பெரிய அளவில் பண்டைத் தமிழகத்தில் நிலவியிருந்தது என்பதனை நம் தமிழ் நூல்கள் நயமுற நவிலும்.

ந - கி