பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நல்லோர் நல்லுரை

‘கூற்றம் வெகுண்டு வரினும் மாற்றும் ஆற்றலையே!” என்று சேரர் வீரமும் ஈரமும் பேசும் பதிற்றுப்பத்தும்,

கூற்றம் வரினும் தொலையான் என்று ‘கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகையும்’,

“கூற்றுவன் தன்னொடிவ் வுலகம் கூடிவந்து

ஏற்றன வென்னினும் வெல்ல வேற்றுள மாற்றவன் தம்பி’ என்று கம்பராமாயணமும், எமனையும் எதிர்நின்று வெல்லும் ஆற்றலுடைய படையின் மாட்சியினைப் புகன்று நிற்கக் காணலாம். -

அரசன்மாட்டும், அதன்வழி அவன் செங்கோ லோச்சித் தாம் வாழும் தாய்நாட்டின் மீதும் படைமறவர் கொண்ட அன்பின் ஆற்றலே. நெஞ்சொத்த நிலையி னையும், மறஞ்சான்ற மனவலியினையும் வழங்கிற்று.

எனவே உயிர் பறிக்கும் எமனின் எண்ணத்தையும் பழுதாக்கி நிற்கும் படைத்திறம் சான்றதே மன்னனின் மாசற்ற படைமாட்சி என்று திருவள்ளுவர் தெளிவுற மொழிகின்றார்.

‘கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்கிற்கும்

ஆற்ற லதுவே படை” -திருக்குறள் : 765

2

மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனங்ான்கே ஏமம் படைக்கு.’ -திருக்குறள் : 7 66 கூற்றுவனே சினந்து வந்தாலும் நெஞ்சொத்துக் கூடி ஒன்று சேர்ந்து எதிர்நின்று வெற்றி காணும் படை