பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூற்றெதிர்க்கும் படை 55

மறவர்தம் பெருமையினை முன்னர்க் கண்டோம். இன்று அத்தகைய படைக்குப் பாதுகாவலாக, அரணாக அமையும் நான்கு நலமுறு பண்புகளைத் திருவள்ளுவர் கூறக் கேட்போம்.

படைமறவர்-வீரர் முதலாவது எவருக்கும் எப்போ தும் எந்நிலையிலும் அஞ்சாத தறுகண்மை, வீரம் உடை யவராக விளங்குதல் வேண்டும். வீரம் என்பது மருந்திற் கும் இல்லாமல் வீரர் என்ற பெயரைக் கொண்டிருத்தல் நகைப்பிற்கிடம் ஆகுமன்றோ? மேலும் வீரம் விளங்கி நின்றால்தான், தம் தாய்நாட்டு மண் கருதிவரும் மாற் றாரைப் போரில் மடிவிக்கச் செய்ய முடியும். பகைவரை வெல்லும் செயலில் விரைவும் வினையாண்மையும் காட்டல் வேண்டும். -

அடுத்து, படைவீரர் பெற்றிருக்க வேண்டிய அரும் பண்பு மானம்’ என்னும் மாசற்ற உணர்ச்சியாகும். “எப்படியாவது வாழலாம்’ என்று வாழும் வாழ்க்கை மானவுணர்ச்சிக்கு மாறானது; அம் மானவுணர்ச்சியினை மிதித்து மாய்த்து ஒழிப்பது. ‘இப்படித்தான் வாழ வேண்டும்’ என்று வாழும் வாழ்க்கை மானவுணர்ச்சிக்கு நிலைக்களமாவது; அம் மானவுணர்ச்சியினை மதித்துப் போற்றுவது. எனவே மானவுணர்ச்சியினை மதித்து ஒழிப்பதும், மதித்துப் போற்றுவதும் அவரவர் வாழும் நெறியால் துலக்கமுறுவன எனலாம். இம் மானவுணர்வு படைவீரர்பால் பாங்குற அமைந்து விட்டால் அரசனுக்கு ஒரு தாழ்வும் வாராமற் காத்தலும், தங்கள் பெயரி னையும் பெருமையினையும் நிலைபெற நிறுத்தலும் தாமே அமையும்.

சேரமான் கனைக்கால் இரும்பொறை மானவுணர்ச்சி மானப் பெற்றிருந்த காரணத்தால்தான், தான் அடை பட்டிருந்த சோழ மன்னன் சிறைக்கோட்டக் காவலர்கள்