பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. நல்லோர் நல்லுரை

நீர் வேட்கை நீங்கத் தனக்குத் தண்ணிர் தராத நிலையில் உடனே உயிர் துறக்க ஒருப்பட்டு அவ்வாறே உயிரும் துறந்த நின்று, தான் இயற்றிய புறநானூற்றுப் பாட லால் இன்றும் வாழ்கின்றான். அவன் மானவுணர்ச்சியும் பாராட்டப்படும் தகுதியுடையதாயிற்று!

“மாண்டவழிச் செலவு என்பது தனக்கு முன் வாழ்ந்த வீரர்கள் சென்ற நன்னெறியில் நடப்பதாகும். முன்னோர் சொன்ன-சென்ற நெறியினை மரபு என்று போற்றுதல் தமிழ் வழக்காகும்.

தேய்ந்த பாதையிற் செல், முன்னேர் சென்ற வழியிற் பின்னேர் செல்லட்டும்’ வழியே ஏகுக; வழியே மீளுக’

என்றும், இன்றும் நாட்டுப்புறங்களில் வழங்கும் மொழிகள் முன்சென்ற வழியின் சிறப்பினை முறையுற மொழியும்.

சில மரபுகளை அந்நாளைய வீரர் வழிவழி ஒம்பி வந்தனர். போர்க்களத்தே தோற்றோடிப்போகும் பகைவர்தம் முதுகின் மீது வாளோ, வேலோ பிற படைக் கருவிகளோ ஒச்சாது நிற்கும் செயல் அறமெனப் போற் றப்பட்டது. எந்நிலையினும் தாம் பணியாற்றப் புகுந்த அரசனைக் காட்டிக் கொடுத்து அறைபோகும் தன்மை யினை வீரர் ஒரு நாளும் கொள்ளார் என்பதும் வீரர் மேற்கொண்ட வழிச்செலவு'களாகும்.

அடுத்து, அரசனுடைய பெரு நம்பிக்கைக்கு உரியவர் களாக வீரர் செயல் அமையவேண்டும். வீரர் நடவடிக் கைகள் ஒருபோதும் யாராலும் ஐயப்பாட்டிற்குரியனவாக அமைதல் என்பது அறவே கூடாது.