பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூற்றெதிர்க்கும் படை 57

வீரம், மானம், மரபு, மன்னன் நம்பிக்கை ஆகிய இந்நான்றா பண்புகளே ஒரு படைக்குப் பாதுகாப்பாக அமையும் அரண்கள் என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.

‘மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு’ -திருக்குறள் : 766

3

‘தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த

போர்தாங்கும் தன்மை அறிந்து. -திருக்குறள் : 7 67

எண்ணற்ற மக்களின் உயிரை நொடிப்பொழுதில் இருந்த இடத்திலிருந்தே கொன்று குவிக்கும் கொடிய கொலைக் கருவிகள், படைக்கருவிகள் என்ற பெயரில் கணக்கின்றிப் பெருகிவிட்ட-இரக்கவுணர்வுக்கு இடமில் லாமற் போய்விட்ட கொடுங்காலம் இக்காலம். அந்நாளி லும் பகை இருந்தது; அரசர் ஒருவரோடொருவர் மாறு பட்டனர்; போர்க்களத்தில் அணிவகுத்து நின்றனர்; தத்தம் வீரம் காட்டி வெம்போர் விளைவித்தனர். வெற்றி பெற்றவர் வாகை சூட, தோல்வியுற்றவர் துன்பங்களை ஏற்றனர்.

ஆனால் அந்நாளில் போர் முறைகளில் அறநெறிகள் போற்றப்பட்டன.

பசுக்களும், அறம் வளர்க்கும் அந்தணர்களும், மகளிரும், நோயாளிகளும் பிள்ளைபெறாத மணமக்களும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விடுங்கள் என்று பறையறைவித்த பின்னரே பகைவர் நாட்டின் மீது படை யெடுத்துச் சென்றனர் படை மறவர்கள் என்பது புற நானுாறு கூறும் செய்தி. போர்க்களத்தே படைக்கலன்