பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நல்லோர் நல்லுரை

இழந்து நிற்போரைத் தாக்கி நில்லாமையும், போர்க் களத்தே தோற்றுப் புறமுதுகு காட்டி ஒடுபவர் மீது வாள் முதலியன ஒச்சிக் கொல்லாமையும் போர் நெறிகளாகக் கொள்ளப்பட்டன. போர் நடைபெறப் பாழிடங்களே தேர்ந்தெடுக்கப்பட்டன.

இவ்வாறான செயல்கள் மறப்போரிலும் அறநெறிகள் போற்றப்பட்ட நிலையினைத் தெளிவுறுத்தும். மேலும் போர்வீரர்க்கு முடிவு-இலட்சியம்-எப்படியாயினும் வெற்றி என்பதன்று. வெற்றியே வேண்டும், ஆயினும் வெற்றி நேரிய வழியில் வரவேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக நின்றார்கள்.

முடிவு மட்டும் மாசற்றதாக இருந்தால் போதாது, முடிவை அடைய நாம் மேற்கொள்ளும் வழி முறைகளும் இந்தப் பாடலில் நமக்கு அறிவுறுத்துகின் றார்.

போர்க்களத்தில் முன்னால் நிற்கும் படையினைத் ‘துரசி’ப்டை என வழங்குவர். மண்ணின் மேற்பரப்பில் து.ாசி விளங்குவது போல, படையின் முதலணி துரசிப் படை'யாகும். இன்றும் செய்யாறு எனும் ஊருக்குச் செல்லும் வழியில் காஞ்சிபுரத்தினையடுத்துத் துாசி’ எனும் ஊரினைக் காணலாம். இவ்வூர் தமிழர் வீர வாழ்விற்குச் சான்றாக நிற்கின்றது.

அரசர் வியூகம் வகுத்து-அதாவது படை வீரர் களைப் பலப் பல அணிகளாக வகுத்துப் பகைவர் மேற் செலுத்துவர். இத்தகைய படைவகுப்பு பல வகைப் படும். மாற்றாரால் இவ்வாறு அணிவகுக்கப்பெற்றுத் தன்மேல் போரிட வந்த படையின் போரை விலக்கும் தன்மை/உபாயம்/வழிவகை அறிந்து தன் L!&}L_. வகுப்பினை வகுத்து, அவர் பக்கத்திலிருந்து முதலா