பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூ ற்றெதிர்க்கும் படை 59

வதாக எதிர்ப்படும் துாசிப் படையினைத் தன் மீது வாராமல் முதலாவது காத்துக் கொள்ளுதல் வேண்டும். அதனோடு மட்டும் அமையாது, அத் துாசிப் படையைத்

துளைத்து உட்சென்று, அவர்கள் படை வகுப்பைச் சின்னாபின்னமாக்கி, சிதறச் செய்து வெற்றிக்கு வித்திடுவதே படைமாட்சியாகும் எ ன் கி ற ர |ர் திருவள்ளுவர்.

இதனால் படைவகுப்பின் தன்மையறிந்து தாக்கி வெற்றிபெறும் தகவும், தூசிப் படையைத் துளைத்துச் சென்று வெற்றியை விருந்தாக்கிக் கொள்ளும் படை மறவர் பாங்கும் பெறப்பட்டன. இத்தகு படைகளே மாட்சிக்குரிய மாசற்றவைகள் என்கிறார் திருவள்ளுவர்.

‘தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த

போர்தாங்கும் தன்மை அறிந்து.” -திருக்குறள் : 767