பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலடியார்

==

7. வந்தது வந்தது கூற்று!

1

“நின்றன. கின்றன நில்லா எனவுணர்ந்து

ஒன்றின ஒன்றின வல்ல செயின் செய்க செறன. சென்றன வாழ்நாள் சென்றுத்துடன் வந்தது வந்தது கூற்று.”

-நாலடியார் : 4 எண்ணற்ற உயிர்கள் இவ்வுலகில் பிறக்கின்றன; வளர்கின்றன; வாழ்கின்றன: முதுமையுறுகின்றன: முடிவில் முடிகின்றன. உயிர் உடம்போடு கூடி வாழும் நிலையினை உயிர்ப்பு என்கிறோம். உடம்பை விட்டு உயிர் நீங்கினால் அந்நிலையினை இறப்பு என்கிறோம். இன்ன உயிர் இத்தனை நாள்கள் உயிர்க்கும், இன்ன உயிர் இன்ன நாளில் இறக்கும் என்று எவராலே கூற முடியும்? எவராலுங் கூறமுடியாது அன்றோ. இதைத் தான் சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகள், ‘இதுவென வரைந்து வாழ்நாள் உணர்ந்தோர்

முழுர்ே உலகின் முழுவதும் இல்லை”

-சிலம்பு, நடுகற்காதை : 181-182.

என்றார். நாள்தோறும் கீழ்த்திசையில் கதிரவன் உதிக்கக் காண்கிறோம். தங்கம் உருக்கி வார்த்தாற்போன்று ஒளி பரப்பி உலகின் இருளை ஒட்டி ஒளியை ஊட்டிய கதிரவன், மாலையில் மேற்றிசையில் மாணிக்கச் சுடராய்