பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்தது வந்தது கூற்று _ 6 I

ஒளிர்ந்து மறைகிறான். ஒவ்வொரு நாள் கழியும்போதும், நமக்கு என வரையறுக்கப்பட்ட வாழ்நாளில் - வாழும் நாளில் - ஆயுளில் - ஒருநாள் போய்விட்டது என்பதனை உணர்த்தல் வேண்டும். இவ்வுலகில் திரும்பப்பெற முடியாத அரியனவற்றுள் ஒன்று கழிந்துபோன நேர மாகும். எனவே இவ்வுலகிற் பிறந்த ஒவ்வோர் உயிரும் வாழ்நாள் சென்றன. சென்றன என்று அறிதல் வேண்டும். உயிர்க்கு வரையறுக்கப்பட்ட வாழ்நாள் முடிவுற்றதும் அவ்வுயிரை இவ்வுலகத்திலிருந்துகொண்டு செல்ல இயமன் அடங்காச் சினங்கொண்டு ஆற்றலுடன் விரைந்து வருகின்றான். அவனோ கூற்றுவன். ஓர் உயிரை அதன் உடம்பினின்றும் கூறுபகுப்பவன், பிரிப்பவன், அச் செயலை நடுவுநிலைமையோடு எந்நாளும் செய்து வருபவன். அவனுக்கு இன்னார் வேண்டியவர், இன்னார் வேண்டாதவர் என்ற பாகுபாடு, விருப்பு வெறுப்பு சற்றும் கிடையாது. யார்மாட்டுங் கண்ணோடாது உயிர் வெளவுதல் அவன் தொழில். இந்தத் தொழிலை அவன் உலகில் உயிர்கள் தோன்றிய நாள் தொடங்கியே முறையாகச் செய்துகொண்டு வருகின்றான்.

இந்த நேரத்தில் சில உயிர்கள் சில பொருள்களை இல்வுலகில் விடாது பற்றி நிற்கின்றன. அதிலும் குறிப் பாகச் செல்வத்தை, நிலையுடையது-நிலைத்த வாழ் வுடையது என்று விடாது பற்றி நிற்கின்றன. செல்வம்பொருள்-பணம் மனித வாழ்விற்கு-அதன் இயக்கத் திற்கு-வளர்ச்சிக்குக் கட்டாயம் தேவை. பொருளி லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றார் திருவள்ளுவர். “செய்க பொருளை என்றும் கட்டளையிடுகின்றார். ‘எண்ணிய தேயத்துச் சென்று இருள் அறுக்கும் ஒளி விளக்காக'ச் செல்வத்தைக் காண்கின்றார் செந்நாப் போதார். -