பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நல்லோர் நல்லுரை

ஆனால் அந்தச் செல்வம்-வளமான வாழ்விற்கு வழி கோலும் வகை படைத்த செல்வம் நிலையுடையதா? என்றென்றும் ஒருவன் கையில் உருப்படியாகத் தங்கக் கூடியதா? என்று பார்த்தால் எங்கும் என்றும் அவ்வாறு நிலைத்திருப்பதாகத் தெரியவில்லை. குன்றத்தனை யிருநிதியைப் படைத்தோரும் அன்றைப் பகலே அழி யினும் அழிவர் என்று அதிவீரராமபாண்டியர், நறுந் தொகை"யில் நறுக்குத் தெறித்தாற்போல் நவின் றுள்ளார். நாலடியாரே பிறிதோரிடத்தில் செல்வம் சகடக்கால் போல வரும் என்று குறிப்பிடுகின்றது.

எனவே, செல்வம் வாழ்க்கைக்கு இன்றியமையாது தேவைதான். கட்டாயம் எப்பாடு பட்டேனும் நேரிய வழியில் அதனை ஈட்டவேண்டுந்தான். ஆனால் அச் செல்வம் என்றும் நம்மிடமே நிலைத்து நிற்கும் என்று மட்டும் எண்ணிவிடக் கூடாது. எனவே செல்வப் பொருள் கள் அனைத்தும் எல்லாமாய் எங்குமாய்ப் பரந்திருக் கின்ற பரம்பொருள் போல் நிலைத்த வாழ்வுடையன என்று மட்டும் கருதிவிடக் கூடாது. அவ்வாறு கருதாமல், இந்தச் செல்வம் நம்மைவிட்டு நாளையேகூடச் செல்வோம்’ என்று சொல்லிவிட்டோ, சொல்லிவிடா மலேயுங் கூடச் சென்று விடலாம் என்பதை உறுதியாக உணரவேண்டும். அவ்வாறு உணர்ந்தவுடன் இவ்வுலகில் என்றும், நாம் அழிந்தாலும் அழியாத பொருள், காலத் தால் அழிக்க முடியாத பொருள் என்ன என்பதனை அறிந்து காணவேண்டும்.

அவ்வாறு நோக்கும்போது அறச்செயல்களே அவனி உள்ளளவும் நிலைத்து நிற்கும் நீர்மையன என்ற முடிவு தோன்றும். ஒருவன் மாய்ந்தாலும், அவன் இயற்றிய அறம் ஒரு நாளும் மாயாமல் அவனுக்குப் பெயரும் புகழும் தந்து கொண்டிருப்பதனைக் காணலாம், ஆகவே