பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்தது வந்தது கூற்று 63

ஒன்றியனவாக-பொருந்தியனவாக இவ்வுலகில் நிலைத்து நிற்பது அறத்திருப்பணிகளே என்று உணர்ந்து, அவ் அறச் செயல்களை யெல்லாம், “நில்லாத செல்வம்’ நம்மிடத்தில் நிலைத்து நின்று கொண்டிருக்கும் கால எல்லையிலேயே கணக்காகச் செய்து முடித்து விட வேண்டும் என்று நயமுடன் நவில்கிறது நாலடியார்ப் பாட்டு. பாட்டிலே நின்றன நின்றன, ஒன்றின ஒன்றின’, சென்றன. சென்றன, வந்தது வந்தது என்று நான்கு அடுக்குச் சொற்கள் வந்துள்ளன. ஒவ்வோரடியிலும் ஒவ் வோர் அடுக்குச் சொற்கள் அமைந்து விரைவைப் புலப் படுத்துகின்றன. இடையில் வல்லே செயின் செய்க” என்ற கட்டளையும் பிறப்பிக்கப்படுகிறது. இனிப் பாடலைப் பார்ப்போம்.

கின்றன. கின்றன நில்லா எனவுணர்ந்து ஒன்றின ஒன்றின வல்லே செயின் செய்க சென்றன. சென்றன வாழ்நாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று” -நாலடியார் : 4 ஆலும் வேலும் பல்லுக்குறுதி போல் ‘நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி அன்றோ?

2

“என்னாலும் ஒன்றுதம் கையுறப் பெருக்கால்

பின்னாவ தென்று பிடித்திரா-முன்னே கொடுத்தார் உயப்போவர் கோடில் தீக் கூற்றம் தொடுத்தாறு செல்லும் சுரம்’ -நாலடியார் : 5 செல்வம்’ எனப்படுவது யாது? இக்கேள்வி, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்ச் சங்கத் தமிழ்ப் புலவர் ஒருவர் மனத்தில் எழுந்தது. நல்ல அறிவு சான்ற மனம் அவருடையது. இக்கேள்வி குறித்து விடாது