பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நல்லோர் நல்லுரை

சிந்தித்தார். வாழ்க்கையில் சிலர் தாங்கள் இட்டது கட்டளையாக வேண்டும் என்று முனைப்புடன் நினைக் கிறார்கள். இன்ன செயலை இன்ன நேரத்தில், இடையூறு என்ன எதிர்வந்தாலும் முடித்தே தீருவேன் என்று மொழிகின்றார்கள். இவ்வாறு நெடிய மொழிதல்’ செல்வமாமோ? என்று எண்ணிப் பார்த்தார்.

மணிக்கு நூறு கிலோ மீட்டர் தூரம் என்று பறந்தாலும் அவ்வூர்தியில் பயணம் செய்பவர்களுக்கு ஒர் அலுப்பும் இல்லை; அவ்வளவு ஆடம்பரமான, சொகுசான, வசதிகள் அனைத்தும் நிறைந்து வேகமாகச் செல்லும் புதியதோர் ஊர்தி; அத்தகைய ஊர்தியிலே பறந்து செல்வது கடிய ஊர்தல் செல்வமாகுமா? எண்ணிப் பார்த்தார். அவர் சிந்தனையில் அவை செல்வங்கள் ஆகா என்ற விடை பிறந்தது. இவ்வாறு “நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று; தன் செய்வினைப் பயனே’ என்று கண்டார் அறிவிற் . சிறந்த சான்றோர் பெருமக்கள் செல்வமாகக் கருதுவது யாது? என்று அடுத்து எண்ணிப் பார்த்தார். தம்மைச் சேர்ந்தவர்களுடையவும் சார்ந்தவர்களுடையவும் துன்பங் களுக்கு இரங்கி, அவர்களின் துன்பத்தைத் துடைப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சியே-செய்யும் உதவித் திருப் பணியே-செல்வம் என்று கருதப்படும் என்று கண்டார்.

“சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்

புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே.’

-நற்றிணை : 210 எனவே செல்வம், செல்வம் என்று மதிக்கப்படுவது, அச் செல்வம் அருள் மனத்தோடு பிறர்க்கும் பயன்படும் தன்மையைப் பெறும் பொழுதேயாகும் என்பது தெளி வாகின்றது. வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான்