பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்தது. வதந்து கூற்று

பெற்ற முழங்கு முரசுடைச், செல்வம் நாய்பெற்ற தெங்கம் பழம்’ என்கிறது பழமொழி நானுாறு. எனவே, வழங்கலும் துய்த்தலும் செல்வத்தின் செயற்பாடுகளாக அமைய வேண்டும் என்பது பெறப்படுகிறது. துய்த்தலி னும் வழங்கல் முற்கூறப்பட்டிருப்பது, தனக்குச் செல்வம் பயன் படுவதனைக் காட்டிலும் பிறர்க்கே செல்வம் பெரி தும் பயன்பட வேண்டும் என்பதனைப் பெரிதுறக் காட்டும்.

ஒருவர் பாடுபட்டுப் பாடுபட்டுப் பணத்தைத் தேடு கிறான். அரிய முயற்சியிற் பெரியதாகக் கிடைத்ததே இச் செல்வம் என்று கருதி, அச்செல்வத்தைச் சிக்கெனப் பிடித்துக் கொள்கிறான். இன்றைக்கு என வாழும் சிந் தனையில்லாமல், நாளைக்கு என-அதிலும் உடலையும் உள்ளத்தையும் ஒய்வுறச் செய்யும் முதுமைக் காலத்திற் பயன்பட வேண்டும் என்று கருதிச் சேமித்து வைக்கிறான். ஆனால் முதுமைக்காலம் வருமுன்னர் அவன் ஈட்டிய செல்வம் போய்விடலாம்; அன்றி அவன் ஈட்டிய செல்வம் இருக்க, அவன் முதுமை அடையாமல் இளமையிலேயே இறந்தும் போகலாம். இதனைப் பழைய உரையாசிரியர் பதுமனார், நிலையாமை யெனவே அமையுமாயின், யாக்கை மேல் வையாது செல்வத்தின் மேல் வைத்து நிலையாமை சொல்லிய தென்னையெனின், யாக்கை நிற்க செல்வமிழத்திலும், செல்வம் கிடக்க யாக்கை யிழத்தலும் வருதலால், செல்வங் கொண்டறஞ் செய்ய வேண்டுதலின் எல்லாரிடத்துமுளதாகிய செல்வங்கள் எல்லாவற்றானும் நில்லாமை காட்டி யறஞ்செய்வித்தல் கருத்தாகலின் என்றவாறு’ என்கிறார். -

எனவே செல்வ நிலையாமை என்று சொன்னால் அதனை ஒர் இழிவாக் கருதாமல், உலகஇயல்பாகக் கருதி,