பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 நல்லோர் நல்லுரை

நில்லாத செல்வம் நிலைத்திருப்பது ஒரு நிமிடமே யாயினும் அந்த நிமிட எல்லைக்குள் ஆற்றி முடித்து விடக்கூடிய அறங்களைத் தப்பாமற் செய்துவிட வேண்டும் என்பதே ஆன்றோர் அறிவினில் தெளிந்த அரும்பெரும் உண்மையாகும்.

ஏனெனில், இளமைக் காலத்திலேயே-தாம் பொருள் வசதியோடு பொலிந்த காலத்திலேயே, ஒன்று இல்லை’ என்று இரந்து வந்தவர்க்கு, இல்லை யென்று சொல்லி விடாமல் இந்தாருங்கள், இதனை எடுத்துச் செல்லுங்கள் என்று ஈகையுள்ளத்தோடு, இரக்க சிந்தையோடு கேட் டோர்க்குக் கொடுத்தவர்கள், நடுவுநிலைமைப் பண் பினின்றும் நழுவாத, ஆனால் அதே நேரத்தில் யார்க்கும் எவருக்கும் எந்தக் காலத்திலும் இரக்கங் காட்டித் தன் நீதி-நியதி வழுவாத நெஞ்சத்தை நெகிழ்வித்துக் கொள் ளாத யமன், தம்மைப் பாசத்தால் கட்டிக்கொண்டு போ கின்ற பாலைநிலத்திலிருந்து தப்பிச் செல்பவராம். அதாவது அவர்கள் இம்மையில் வீட்டுப்பேறும் பெறுவர் என்பதாம்.

எனவே செல்வம் குட்டை நீராகத் தேங்கி விடாமல்,

ஆற்று நீராக ஒடி ஏழைமை என்னும் வயல்களுக்குப் பாய்ந்து வாழ்வையும் வளத்தையும் தருதல் வேண்டும்

என்பது பெறப்படும். எனவே ஒரு பொருளே கிடைத்

தாலும், நாளைக்கென்று விடாது பற்றி நிற்காமல் இரந்த வர் க்கு ஈந்தால் இயமனும் இரங்குவான் என்ற கருத் த மைந்த நாலடியார்ப் பாடல் வருமாறு: -

‘ என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்

பின்னாவ தென்று பிடித்திரா-முன்னே கொடுத்தார் உயப்போவர் கோடில் தீக்கூற்றம் தொடுத்தாறு செல்லும் சுரம்’ -நாலடியார்: 5