பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

“இழைத்தநாள் எல்லை யிகவா பிழைத்தொரீஇக் கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை-ஆற்றப் பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின் நாளைத் தழிஇம்தழி இம் தண்ணம் படும்’ -நாலடியார் : 6. கோள்களும் நாள்களும் ஒரு கணக்கில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. வானவீதியில்தான் எத்தனை கோள்கள்? அவை ஒரு சிறிது கணக்குத் தவறி இயங்கி னாலும், உலகம் என்னாகும்? இதனைப் பாரதியார்,

‘கைப்பிடிகொண்டு சுழற்றுவேன்-தன்

கணக்கிற் சுழன்றிடுஞ் சக்கரம் என்றும், பாரதிதாசன்,

“அங்குத் தங்கும்வெளியினிற் கோடியண்டம்-அங்தத்

தாயின் கைப்பந்தென ஓடுமடா” என்றும் கூறினர். எனவே இங்கு, இவ்வுலகில் எல்லாம் ஒரு நியதியில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே, இவர் இவர்க்கு என்று வாழ்நாள்கள் ஏற்கெனவே நிர்ண யிக்கப்பட்டுள்னன. அந்த வாழ்நாளினைக் கடந்து ஒரு விநாடியும் ஒருவரும் வாழமுடியாது. எனவே, எடுத்த உடலோடு கூடி, உயிர் வாழும் நாள் இவ்வளவு என்று ஏற்கெனவே படைத்தவனால் வகுக்கப்பட்டு விட்டது. ஆனால் யாருக்கும் தமக்குரிய வாழ்நாள்கள் இத்தனை என்று ஒரு சிறிதும் அறியமுடியாது. இதனையே அறநெறிச்சாரம், - ‘கோட்டுநா ளிட்டுக் குறையுணர வாராதால்

மீட்டொருநாள் இடையும் தாராதால்” என்று, ஒரு நாளை மேற்கொண்டு பெறவோ, ஒரு நாளைக் குறுக்கிக் கொள்ளவோ இயலாது என்று பேசுகின்றது. இதே அறநெறிச்சாரம் பிறிதோரிடத்தில்