பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 நல்லோர் நல்லுரை

இன்னும் அழகாக, ஏன்? ஒப்பற்ற உணர்வு நிலையிலே ஒப்பற்ற கருத்து ஒன்றனையும் குறிப்பிட்டுள்ளது. நம்முடைய வாழ்நாளில் இதுவரை எத்தனை நாள்கள் கழிந்து சென்றிருக்கின்றன என்று சிறுவிரலை விட்டுக் கூட நெடுக எண்ணி விடலாம். ஆனால் இனி எத்தனை நாள் வாழப் போகிறோம் என்பதனை எவராலும் எக்காலத்தும் எளிதில் அன்றி அரிதாகவும் சொல்ல இயலாது.

‘சென்றநாள் எல்லாஞ் சிறுவிரல்வைத்து எண்ணலாம்

கின்றநாள் யார்க்கு முணர்வரிது.” -அறநெறி : 69 எனவே இனி வாழும் நாள்கள் இத்தனை என்று எண்ணக்கூடா நிலையில் எமனிடத்திலிருந்து தப்பிப் பிழைக்க யாரால் முடியும்? எனவே கூற்றம் குதித்தால், அக் கூற்றத்தின் தாக்குதலிலிருந்து, ஆளுகையிலிருந்து, பிடியிலிருந்து தப்பிப் பிழைக்கும் ஆற்றலை உடையவர் இவ் அவனியில் ஒருவரேனும் உண்டா? இதுவரை உலக வரலாறு அத்தகையோர் ஒருவரையேனும் கண்ட துண்டா?

எனவே இந்த அரிய, என்றும் நிலைத்திருக்கக் கூடிய அடிப்படை உண்மையினைக் காணாதவர்கள் எண்ணிய செயல்களை முடிக்காமலே இந்த உலகத்தி லிருந்து திடீரென்று விடைபெற்றுச் சென்றுவிடுகிறார்கள். ஒர் ஊரில் பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் பலவகை யிலும் பெருக்கியவன் ஒருவன் இருந்தான். சேர்த்த பெரும்பொருளேத் தானும் துய்க்காமல், பிறருக்கும் வழங்காமல், அனைத்துப் பொருளையும் தங்கக் கட்டி யாக்கிச் சேமித்து வைத்தான். நாளைக்கென நமக்கு வேண்டும் என்ற சிந்தனையே அவனை இவ்வாறு செய்ய வைத்தது. முதுமையில் பிறருக்கு வழங்கி, போகும் வழிக்குப் புண்ணியத்தைத் தேடிக்கொள்ளலாம்