பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்தது வந்தது கூற்று 69.

கொண்டிருந்தான். ஆனால் இயமன் அவனைக் கேட்டுக் கொண்டா அவன் உயிரைக் கவர வருகிறான்? இல்லையே! திடீரென்று கூற்றுவன்-இயமன் அவனை நெருங்கினான். அறஞ்சாராது மூப்படைந்த அவன் நாக்கு அடைத்துக் கொண்டது; கண்கள் செருகத் தொடங்கின. உறவினர் அவனைச் சுற்றிக் கூடிவிட்டனர். அந்நிலையில் அப்பொழு தாவது அறம் செய்து முடித்துவிட வேண்டும் என்று எண்ணினான். தன் மனைவியை அழைத்துக் கையால் சாடை காட்டி அப்பொன் கட்டியை எடுத்து வருமாறு பணித்தான். அவன் மனைவியோ உலகியல் அறிந்தவள்; தேர்ந்தவள். எனவே அவளை வாழவைக்கும் தங்கக் கட்டியைக் கொண்டு வராமல், ஆனால் அதே நேரத்தில் நிலைமையைத் திசை திருப்ப முனைந்தாள். “ஐயோ! என் வீட்டுக்காரர் இறக்குந் தறுவாயில் விளாம் பழத்தின் மீது ஆசைப்பட்டாரே, விளாம்பழம் கிடைக்கும் காலம் (Season) இஃது இல்லையே! ஐயோ! என் அருமைக் கணவரின் இறுதிக் காலத்து ஆசையை எவ்வாறு நிறை வேற்றுவேன்?’ என்று அவன்மாட்டுப் பேரன்பு கொண் டவள் போல நடித்து அழுதாள். இக்காட்சியினைத் திருத் தக்கதேவர்,

‘ கையால் பொதித்துணையே காட்டக்

கயற்கண்ணாள் அதனைக் காட்டாள் ஐயா விளாம்பழமே என்கின்றீர்

ஆங்கதற்குப் பருவம் அன்றுஎன் செய்கோ வெனச்சிறந்தாள் போற்சிறவாக்

கட்டுரையாற் குறித்த வெல்லாம் பொய்யே பொருளுரையா முன்னே

கொடுத்துண்டல் புரிமின் கண்டீர் ‘ -சிவகசிந்தாமணி, கே.சமரியாரிலம்பகம்: 142 என்று அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். 5 -