பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 U - நல்லோர் நல்லுரை

இதனால் பெரும்பொருளைச் சேமித்து வைத்து நாளைக்கு என்ற எண்ணத்தில் வாழ வேண்டா.

“Tomorrow is too late; live today” grgötliff. இளங்கோவடிகள்,

“ நாளைச் செய்குவம் அறமெனில் இன்றே கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும் ‘

-சிலம்பு நடுகற்காதை: 179-180. என்பர்.

‘உறங்குவது போலும் சாக்காடு’ என்றார் திருவள்ளுவர். சாவு வரும் நாளினை, நேரத்தை அளந்து சொல்ல முடியாது. சாப்பறை திடீரென்று ‘தழிஇம் தழிஇம்’ என்று ஒலிக்கத் தொடங்கிவிடும். நெருநல் உளன ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்தான் இவ்வுலகில், “ஒன்றே செய்க, ஒன்றும் நன்றே செய்க, நன்றும் இன்றே செய்க, இன்றும் இன்னே செய்க என்ற ஆன்றோர் அருள்மொழிப்படி நல்ல செயல்களை நாளும் நாடிச் செய்ய வேண்டும் என்கிறது நாலடியார்.

‘’ இழைத்தநாள் எல்லை யிகவா பிழைத்தொரீஇக் கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை-ஆற்றப் பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின் நாளைத் தழ் இம் தழி இம் தண்ணம் படும்’

-நாலடியார்: 6