பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. மாண்புறு கவசம்

1

“ஆலும் வேலும் பல்லுக் குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி’ என்பர். இப்படித்தான் வாழ வேண்டும் என்று எண்ணி அதற்கேற்ப ஒர் எல்லைக்குள் தன் வாழ்க் கையை வகுத்துக்கொண்டு வாழ்பவன் வாழ்க்கை ஒரு நாளும் வீழ்தல் இல்லை; ஆனால் எப்படியாவது வாழலாம் என்று வாழ்பவன் வாழ்க்கையில் அல்லலும் அகப் போராட்டங்களும் மிகுதல் உறுதி. இப்படித்தான் வாழ வேண்டும் என்ற உறுதிக்கு நாலடியார், திருக்குறள் போன்ற நூல்கள் ஆக்கஞ் சேர்க்கின்றன. எனவேதான் ‘நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்று நம் முன்னோர் வழங்கினர். --

இறைவன் படைப்பில் பல விந்தைகளும் மாறுபாடு களும் இருப்பதனைப் பார்க்கிறோம். ஒரு கையில் அமைந் துள்ள ஐந்து விரல்களைக் காட்டி அவற்றின் வேறுபாடு களைச் சுட்டி, ஆயினும் அதே நேரத்தில் அவ்வைந்து விரல் களும் ஒன்றாய் இணைந்து செயலாற்றுவதனைக் குறிப் பிடுவர். பல்வேறு சுவைகளைப் படைத்தது இறைவனின் தனிப்பேரருளினைக் காட்டும். எதிரிடையான சுவைகளும் வாழ்க்கைக்கு உறுதி பயக்கக் காணலாம். இன்பதுன்பம், ஒளி இருள், பகல் இரவு முதலானவற்றினைக் காண்க.