பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாண்புறு கவசம் 73

வேம்பின் இலையுட் பொதிந்த வாழைப்பழம் கசப் பில்லை; அது போன்று தீய இனத்தோடு சார்ந்திருப் பினும் இயற்கை யறிவுடையார் மனம் தீதாவதில்லை’ என்ற பொருள் கிடைக்கும். உவமையைக் கூர்ந்து நோக் கினால் மேலும் சில உண்மைகள் புலனாகும். வேம்பின் இலையும் வாழையும் சேர்ந்திருப்பினும் இடையில் ஒரு தடை உண்டு. ஆம் வாழையைச் சுற்றிப் படைப்பிலேயே அமைந்திருக்கும் இயல்பான தோல்தான் அது. வேம்பின் கசப்பு வாழையைச் சாராமல் வாழையின் தோல் காக் கின்றது. காத்தல் மட்டும் தோலின் தொழில் அன்று. வாழையைக் கணிய வைப்பதும் அதன் தொழிலாகின்றது. வேம்பின் கதகதப்பைத் தான் வாங்கிக் கணியவைத்து வாழைக்கு இனிமை சேர்க்கின்றது தோல். ஆம் “திதொரீஇ நன்றின் பால் உய்க்கும் அறிவு போலத் தோல் செயலாற்றுகின்றது. தோலின் இவ்விரு தொழிலும் அறி வால் அமைகின்றன. இப்போது நமக்குப் புதியதோர் விளக்கம் கிடைக்கக் காணலாம். வேம்பு தீய இனத்திற்கு உவமை; வாழை நற்பண்புடையாருக்கு உவமை. தோல் அறிவென்னும் அங்குசத்திற்கு உவமை, மனத்தைக் கொண்டு நெறிப்படுத்தும் திறம் வாய்ந்தது அறிவு. தக்கது. இது தகாதது இஃது என்று தடுத்தாட்கொள்வது அறிவு. மனத்தைக் காக்கும் மாண்புறு கவசமாய் அறிவு செயல்படுகின்றது. எனவே தீயோரைச் சேர்ந்த நல் லோரும் தம் மனத் திண்மையால் தீயதன் பால் திரியாமல் நல்லதன்பால் நிலைத்து நற்பயன்களையே சமுதாயத் திற்கு ஈவர். இவ்வாறு நற்குண முடையோர் தீயோரைச் சேர்ந்திருந்தாலும் அவர்கள் பண்பு கெடாமற் காப்பது அறிவுடைமையே என்கிறது நாலடியார். பாடலைக் காண்போம்: