பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நல்லோர் நல்லுரை

வேம்பின் இலையுள் கவியினும் வாழைதன் தீஞ்சுவை யாதும் திரியாதாம்.-ஆங்கே இனத்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை மனத்தீதாம் பக்கம் அரிது. ‘ -நாலடியார் : 244

2

அறத்திற்கும் மறத்திற்கும் போராட்டம் உண்டு. அறிவுக்கும் உணர்ச்சிக்கும் போராட்டம் உண்டு. அறிவிற் கும் புலன்களுக்கும் போராட்டம் உண்டு. அறிவு வழிச் செல்பவனுக்கு, வாழ்க்கை இன்ப நாடகமாகவும், உணர்ச்சிவழிச் செல்பவனுக்குச் சோக நாடகமாகவும் அமைதல் இயல்பு. புலன்களின் இன்பச்சுவை கட்டுப் படுத்த இயலாதது. ஐம்பொறிகளை அறிவு இயக்காமல் ஐம்பொறிகளும் நம்மை இயக்கத் தொடங்கிவிட்டால் உறுவது அல்லல் அன்றி வேறில்லை, எனவேதான் முன்னோர் ஐம்புல வேட்டுவரால் நாளும் அடையும் துன்பம் பெரிது’ என்றனர்.

தமிழ் நாட்டின் மேற்குப் பகுதியிலும் கடல்; கிழக்குப் பகுதியிலும் நீண்ட கடல்; தெற்குப் பகுதியிலும் கடல்; ஒரு கடலா? முக்கடல்கள். வங்கக்கடலும், அரபிக் கடலும், இந்துமாக்கடலும் இணையும் இடமே தென் குமரித் திருநாடு. தமிழ்நாட்டின் வடக்கே மட்டுந்தான் நிலம். இவ்வாறு நீண்ட நெடிய கடற்கரையைக் கொண் டுள்ள நாடு நம் தமிழ்நாடு. கடற்கரையோரத்து ஊர்கள் பல தமிழ்நாட்டில் உண்டு. கடலும் கடலைச் சார்ந்த பகுதிகளைச் சங்க நாளில் நெய்தல்’ என்ற பெயரால் வழங்கினர். கடல் நீர் உவர்ப்புச் சுவையுடையது. உண்ண வழங்காதது. ஆனாலும் கடலையடுத்த இடங்களிலும் உண்பதற்கு உரிய இனிய நீர் - குடிநீர் உண்டாகும். ஆனால் அதே நேரத்தில் நல்ல நீர்ச்சுனைக்கு, நீர் ஊற்