பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

மாண்புறு கவசம் 75

றுகளுக்குப் பெயர்போன மலையும் மலையைச் சார்ந்த குறிஞ்சி நிலத்தையடுத்த இடங்களிலும் உப்புச் சுவை சார்ந்த உப்ஸ்ரீர் சுரக்கும். இதனை இன்றும் பலவிடங் களிற் காணலாம். ஆதலால் மக்கள் என்று சிறப்பித்துச் சொல்லப்படுதற்குரியவர்கள், குணம் செயல்களால் தாம் சேர்ந்த இனத்தினை யொத்தவர்கள் அல்லர்; தங்கள் தங்களுடைய மனத்திற்கு இயைந்த, பொருந்திய த ன்மையை உடையவர்களாகவே இருப்பர்.

‘கடல் சார்ந்தும் இன்னிர் பிறக்கும்; மலை சார்ந்தும் உப்பீண்டு உவரி நீர் பிறக்கும் - நம்முன்னோர் எவ்வளவு நுட்பமாக இயற்கையின் இயல்புகளை, தன்மைகளை, அளவிலா ஆற்றலை ஆராய்ந்து கண்டிருக்கிறார்கள் என்பது போதரும்.

மனத்திற்கும் இனத்திற்கும் இடையே ஒரு போரட் டம் எழுகின்றது. அந்தப் போரட்டத்தில் இயல்பாக இனம் வெற்றி பெறும் என்று எதிர்பார்ப்பது இயல்பு. காரணம் எவ்வளவுதான் துாய பாலாக இருந்தாலும், அதனைத் துாய்மையற்ற பாத்திரத்தில் வைத்திருந்தால் அப்பால் முற்றிலும் கெட்டுப்போவது உறுதி என்பர். தீய இனத்தாரோடு சேர்ந்துவிட்டால் எவ்வளவு நல்ல இனத் தவரும் தம் இயல்புகெடுவது உறுதி. எனவே பழகும் இனம், சூழலை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பர்.

ஆனால் நாலடியார் சூழலினும் இயற்கையறிவிற்கே, முதன்மை வழங்குகின்றது. மனம் அறிவின் வழிச் செயல் பட்டால் மனமே வெற்றி வாகை சூடும் என்று நயமுற நவில்கிறது நாலடியார். ‘சென்றவிடத்தால் செலவிடாது தீதொரீஇ நன்றின் பால் உய்ப்பது அறிவு’ என்று குறள் மறை தந்த கோமான் திருவள்ளுவர் அறிவின் ஆட்சிக்கும்