பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 - - நல்லோர் நல்லுரை

ஆற்றலுக்கும் வலிமை தேடித் தந்திருக்கிறார் அன்றோ! அறிவின்வழி, இயற்கை அறிவின்வழிச் செயல்படும் மனமுடையார், தீய இனத்தோடேயே தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்டிருந்தாலுங்கூட அவர்களை அத் தீய இனம் தம் பக்கம் சாய்க்கும் வல்ல மையினைப் பெறுதல் இல்லை. இனத்தின் ஆற்றலிலும் அவ்விடத்தே மனத்தின் ஆற்றல் மிகுந்து வெற்றி பெற்று விடுவதனைக் காணலாம். 'மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்’ என்று திருவள்ளுவர் சுட்டியதும் இத னைத்தான். தத்தம் மன ஆற்றலை நன்குணர்ந்தும் நல்வழியில் பயன்படுத்தித் தன்னம்பிக்கையோடு செயல் பட்டால் எவ்வளவுதான் தீய இனத்தோடு எத்துணை தான் நெருங்கிய அளவு தொடர்பு பெற்றிருந்தாலும் அதனால் ஒருநாளும் தளர்வு ஏற்பட்டு வாழ்வு காய்தல் இல்லை. இதனையே நாலடியார் 'மனத்தனையர் மக்கள்’ என்று சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றது. எனவே இந்நாலடியார் அறிவாலமைந்த மனத்திற்குத் தீயஇனத் தையும் வென்று வாழும் ஆற்றல் மிகுதி என எழிலுற எடுத்து விளக்குகின்றது.

   "கடல் சார்ந்தும் இன்னீர் பிறக்கும்; மலைசார்ந்தும்  
    உப்பீண் குவரி பிறத்தலால் தத்தம்
    இனத்தனையர் அல்லர்; எறிகடல் தண்சேர்ப்ப
    மனத்தனையர் மக்களென் பார்."
                                        -நாலடியார்: 2 45.

3

    அறிவாட்சி மிகுந்த அறிஞரின் - பண்பாட்சி நிறைந்த 

சான்றோரின் நட்பு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து நாலடியார் நயம்பட விளக்கப் புகுகின்றது.

-