பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர்

1. வணங்கிய வாயினர்

1

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வி யவர் ‘ -திருக்குறள் : 417

‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல்அரிது’ என்று ஆன்றோர் மனிதப் பிறவியின் அருமைப்பாட்டினை நலமுற நவின்றுள்ளனர். பெறற்கரிய மனிதப் பிறவி யின் சிறப்பே மனத்தின் சிந்தனையாற்றலாகும். நன்று இது, தீது இது என்று தான் காணும் ஒவ்வொரு பொரு ளையும் பகுத்தறிந்து பார்க்கும் பகுத்தறிவு மனிதப்பிறவி யின் தனிச் சிறப்பாகும். கல்விப் பயிற்சியால் அறிவு நிரம்புகிறது. நூற்கல்வி பெறப்பெற அறியாமை இருள் அகல்கிறது. இவ்வாறு கல்வியே ஒருவர்க்கு எழு பிறப் பிலும் உதவும் தன்மையுடையதா யிருக்கிறது. எனவே, ஒருவனுக்கு அழிவில்லாத செல்வம் கல்வியேயாகும். கற்றவரே கண்ணுடையவராகக் கருதப்படுவர். -

கல்வி எல்லார்க்கும் வாய்த்துவிடாது. வறுமைச் சூழ்நிலையால் சிலருக்குக் கல்விச் செல்வம் வாய்க்காது போய்விடலாம். அத்தகையோர் கேள்விச் செல்வமாவது பெறவேண்டும். கேள்விச் செல்வமாவது யாது? கற்றலால்

வ.-1