பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாண்புறு கவசம் 77

நல்ல நட்பு வேண்டற்பாலது; நட்பு என்னும் பண்பு நானிலமெங்கும் பரந்து விரிந்து கிடக்கின்றது. நண்பர்க ளுக்கிடையே அமைந்த தொடர்பு நட்பாகிறது; காதலன் காதலியர்க்கிடையே அமைந்த தொடர்பு காதலாகிறது; பெற்றோர்க்கும் அவர்கள் பெற்றெடுத்த சேய்க்கும் இடையே அமையும் தொடர்பு பாசமாகிறது. அடியவனுக் கும் ஆண்டவனுக்கும் இடையே அமையும் தொடர்பு பக்தி எனப் பேசப்படுகின்றது. இவையனைத்திலும் அன்பு மிகுந்து அறிவு நிறைந்து விளங்குகின்றது. தொடர்பு ஏற்படக் காரணமாய் அமைவது அன்பு: தொடர்பு இடையறாது இடை முரிவுபடாது நீடித்து நிலைக்கத் துணை புரிவது அறிவு. =

‘அறிவுடைமை’ என்று தலைப்பமைந்த அதிகாரத் தில் நட்பைப் பற்றியும் பேச நாலடியார் ஏன் முற்படு கின்றது? என்று மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது தோன்றலாம். நல்ல நட்பு அமைவதற்கு அன்பு என்னும் அடித்தளம் அமைந்தால் மட்டும் போதாது. அறிவு என்னும் கட்டடமும் அந்த அன்பு என்னும் அடித்தளத் தின்மேல் அமைய வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை என்னும் மாளிகை வகையுற, வனப்புற அமையும் என்பதனையே நாலடியார் நாம் நலம் பெற நயம்பெற

நவில்கின்றது.

‘நட்புக்கடலில் வீழும் முன் - அன்பலைகளில் ஆடும் முன், ஆழும் முன் உங்கள் அறிவிற்கு வேலை கொடுங்கள் என்பதனை வலியுறுத்தவே நாலடியார் முதற்கண் முனை கின்றது.

நிலைத்த மனத்தினை யுடையவர்கள் பண்புஎத்தகையதாக இருக்கும்? நிலைத்த மனத்தையுடையவர் கள், நல்ல குணங்களும், ஒழுக்கம் என்னும் உயர் சிறப்பும் பொருந்தியவர்களிடத்தில் முதலில் சேர்தலும், பின் பிரித