பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நல்லோர் நல்லுரை

இலும் செய்ய மாட்டார்கள் என்பதனை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது நாலடியார்ப் பாடல்.

அறிவினுடைய கடமை யாது? செய்யத்தக்கன இவை, செய்யத்தகாதன இவை எனப் பகுத்தறிந்து கூறுதல் அறிவின் பணியாகும். நட்புலகில் எவற்றைச் செய்தல் வேண்டும்? எவற்றைச் செய்தலைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து ஆராய்கிறது இந்தப் பாட்டு. “ஒரா அலும் ஒட்டலும் செய்பவோ? - நண்பரை ஒரு காம் பிரிதலும், மற்றொரு காற் கூடுதலும் உலகத்திற் செய்யத் தக்கனவோ? என வினவுகிறது நாலடியார். இவண் செய்யக்கூடாது என விதிமுறையிற் கூறாமல், செய்யவோ என வினாவாக்கி விடையைப் பெறவைக் கிறது நாலடியார். அறிவால் நெறிப்படுத்தப் படாது, ஆய்ந்தோய்ந்து பாராமல் கண் மூடித்தனமாக அன்பு செய்வோர் தம் நண்பரிடம் சில நாள் கூடியிருப்பர்; பின் சிறு தவறும் (தவறு இன்றெனினும் தவறாகக் காண் பித்துக் கொண்டு) பொறுக்காது, பிரிந்து விடுவர். அதிலாவது உறுதியாக நிற்பரா வென்றால் அதுவும் இல்லை. அப் பிரிவிலும் உறுதியற்ற மனத்தராய் மீண்டும் அவர்களோடு பழக வருவர். ஆனால் அறிவால் அமைந்து நட்புக்கொண்ட நல்லோர் நிலையில்லா மனத்தராய் நிலவமாட்டார். அறிவுடைமைக்கு அஃது அழகும் அன்று. உலகம் அறிவுடையோர்மாட்டு இந்த இனிய நட்புப் பண்பை எதிர்பார்த்து நிற்கிறது.

“ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ?’ என்று வினாக் குறி எழுப்பும் நாலடியார்ப் பாடலின் உட்கருத்து, செய்ய மாட்டார்கள், என்பதாகும்.

நல்ல குணங்கள் பொருந்திய ஒழுக்கமுடை யாரிடத்தும் முதலில் சேர்தலும் பின்னர்ப் பிரிதலும் உறுதியாகச் செய்யமாட்டார்கள். ஒருவேளை முதலிற்