பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாண்புறு கவசம் 7 9

சேர்ந்து, பின் பிரிபவர்களாக இருப்பார்களேயானால், அவர்கள் யாரிடத்திலும் நட்புக் கொள்ளாமல் இருப்பதே நலம் பயப்பதாகும் என்கிறது நாலடியார். --

‘விராஅய்ச் செய்யாமை நன்று என்ற தொடர்நட்புல கில் அறிவுடைமையை வற்புறுத்துகின்றது. எண்ணித் துணிக க்ரும்ம்: துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு”

அன்றோ? ---

நல்லார் எனத்தாம் கனிவிரும்பிக் கொண்டாரை அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும் ” என்றும்,

‘ வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே

தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு ‘ என்றும்,

இறப்பவே தீய செயினுந்தம் நட்டார்

பொறுத்தல் தகுவதொன் றன்றோ “ என்றும், *

தமரென்றுதாங்கொள்ளப் பட்டவர் தம்மைத் தமரென்மை தாமறிந்தா ராயின் அவரைத் தமரினும் நன்குமதித்துத் தமரன்மை தம்முள் அடக்கிக் கொளல் ‘ என்றும் இரண்டு அதிகாரங்களுக்கு முன் நாலடியார் “நட்பிற் பிழைபொறுத்தல் பேசும்.

எனவே நிலைத்த மனத்தினையுடையவர்கள் நற்குண நற்செய்கையுடையாரிடத்துத் தொடர்பு கொண்டால் விட்டு நீங்கமாட்டார் என்பதாம். பாடலைக் காண்போம்:

பரா அரைப் புன்னை படு கடல்தண்சேர்ப! ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ? நல்ல மரூஉச் செய்தியார் மாட்டும் தங்கும்மணத்தார் விராஅய்ச் செய்யாமை நன்று. ‘ -நாலடியார் : 246