பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமூலர்

9. யாவர்க்குமாம் இறை

தமிழ்நாடு செய்த தவப்பயனாய்த் தோன்றிய சான் றோர் பலர். உண்டா லம்ம விவ்வுலகம் இந்திரர் அமிழ் தம், இயைவதாயினும் தமியர் உண்டலும் இலரே என் றும், தமக்கென் வாழா நோன்றாள் பிறர்க்கென முயலும் பெற்றி யானே உண்டாலம்ம விவ்வுலகம்’ என்றும் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த கடலுள் மாய்ந்த-இளம்பெருவழுதி என்ற மன்னன் பாடினான். தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழும் பெற்றியுடைய பேரருளாளர்களை உலகம் மதிக்கிறது; பாராட்டுகிறது; பின்பற்றுகிறது.

இருநிலம் நம்மைத் தாங்கி நிற்கும் தகவுடைய கடமை யினைச் செய்வதே, சான்றோர் வாழும் தவநெறி தழுவிய வாழ்க்கையாலேயாகும். அத்தகு சான்றோருள் தலைசிறந்தவராய், காலத்தால் முற்பட்டவராய் விளங்கும் சான்றோர் திருமூலர் ஆவர். இவர்தம் தொண்டின் தகவறிந்த நம்பியாரூரராம் சுந்தரமூர்த்தி நாயனார் தம் திருத்தொண்டத் தொகையுள் இவரை, நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்” என்று குறிப்பிடு கின்றார். கயிலைமால் வரையைக் காத்தருளும் நாயகர் நந்தி தேவரின் திருவருள் பெற்ற யோகிகளுள் ஒருவர் திருமூலர் என்றும், அவர் அணிமாதி சித்தி பெற்றவர்