பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாவர்க்குமாம் இறை 81

என்றும் கூறுவர். திருமூலர் கி. பி. ஐந்தாம் நூற் றாண்டில் வாழ்ந்த அறவோர் என்று ஆராய்ச்சியாளர் அறைவர். இவர் சிவநெறி மறவாத சிந்தையர். அரனடி நாள்தோறும் சிந்தை செய்து ஆகமஞ் செப்பலுற்ற சிறப் பினர் தம் புகழைத் தரணியில் தமிழிற் பாட வேண்டும் என்றே இறைவன் இவ்வுலகில் இவரைப் பிறப்பித்த தாகக் கூறுவார் இவர்.

‘ என்னைகன் றாக இறைவன் படைத்தனன் தன்னைகன் றாகத் தமிழ்ச்செய்யு மாறே ‘ என்பது இவர்தம் திருவாக்காகும். இவ்வுலக மக்கள் மாட்டு இவர் கொண்ட பேரருள், -

‘ நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ‘ என்னும் இவர்தம் திருவாக்கால் விளங்கும்.

‘ ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் ‘ என்று இறைவன் ஒருவனே, உயிர்க்குலம் அனைத்தும் ஒன்றே என்ற உயரிய, உலகமெலாம் ஒரு குலம் என்ற பரந்துபட்ட பண்பாட்டைப் பாருக்கு அளித்தவர் தவ யோகியும் ஞானச் சிரேட்டருமான திருமூலர் ஆவர்.

@suG sol–u “Ger#gi apsop” (The way of telling) தனித்தன்மை வாய்ந்தது. நில்லாமையே நிலையாக நில்ை பெற்று விளங்கும் இவ்வுலக நிலையாமையினை இவர் போல் வற்புறுத்தி நுணுக்கமாகச் சொன்னவர்கள் வேறு எவரும் இலர் எனலாம். முதற்கண் நிலையாமையை யுணர்த்திப் பின்னர் வாழும் நெறியை வகையுற எடுத்து மொழிகின்றார் திருமூலர்.

இந்த உடம்பின் நிலையாமையினை யாக்கை நிலை யாமை” என்ற தலைப்பில் விளக்குகின்றார். ஒர் அன் பான இல்லறக் காட்சியினை இனிதுறக் காட்டி, பாடலின்