பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நல்லோர் நல்லுரை

இறுதியில் நூலறுந்த காற்றாடிபோல் உயிர் குடிபெயர்ந்து போய் உடல் மட்டும் நின்ற அவலக் காட்சியினைக் காட்டு கின்றார். தன் இனிய மனைக்கிழத்தி, தன் கைவண்ண மெல்லாம் காட்டிச் சமைத்து வைத்த அறுசுவையுணவை உண்ட ஒருவன், அடுத்து அவளோடு இனிய காதல் மொழிகளைப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் இடப் பக்க மார்பு வலிக்கின்றது என்று கூறிக் கீழே விழுந்து உயிர்விட்ட சோகக் காட்சியினை நம் நெஞ்சம் பிழியக் கூறுகின்றார் திருமூலர்.

‘ அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்

மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார் இடப்பக்க மேஇறை நொந்தது என்றார் கிடக்கப் படுத்தார் கிடந்தொழிங் தாரே. “

- -திருமந்திரம்: 148

எனவே யாக்கையின் நிலையின்மையை முதற்கண் அறிந்து கொண்டால் வாழும் நாள்களை வீணாள் ஆக் காமல் இருக்கும் வகையினை மேற்கொள்ளலாம். உடம் பின் தன்மை இத்தகையதாக இருப்பினும், அவ்வுடம்பில் உயிர் நிலைக்கும்வரையில் அதனை ஒம்புதல் வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார். ஏனெனில் காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா மாயனார் குயவன் செய்த மண்ணு பாண்டம் ஒடடா என்று மட்டுமே எண்ணி உடலை ஒம்பாது இருந்து விடுதல் கூடாது என்று கூறுவார் போல், நிலையற்ற உடம்பினுள்ளும் என்றும் நிலைபெற்ற உத்தமனாம் இறைவன் கோயில் கொண்டு எழுந்தருளிக் கொலுவீற்றிருக்கின்றான் என்றும் எனவே, தாம் இறைவன் வாழும் கோயிலாக இலங்கும் தம்முடம்பினை அரிதாக முயன்று ஒம்புவதாகவும் திருமூலர் குறிப்பிடு கின்றார். -