பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாவர்க்குமாம் இறை 83

‘ உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்

உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில் கொண் டானென்று உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே. “

-திருமந்திரம்: 7 25 இவ்வாறு உடம்பினை ஒம்பி இறைநெறி நிற்றலில் தலைப்படும் திருமூலர், வையத்து உயிர்கள் வகையுற வாழும் நெறியினையும் வனைந்து வகுத்துக் காட்டு கின்றார்.

உலக உயிர்களுக்கெல்லாம் ஒருபெருந் தலைவனாக விளங்கும் இறைவனை.வணங்குதற்குரிய ஆறு எது? என்று முதலாவதாக எண்ணுகின்றார். எளியதொரு பச்சிலை கொண்டு வணங்கினும் அஃது எம்பிராற்கு ஏற்றதாகும் எனத் துணிகின்றார். “யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை’ என்கிறார். இஃதோர் பெரிய உண்மையாகும். வாழ்க்கையின் அடித்தளத்தில் வாழ்பவனும் தன் சக்திக் கேற்ற வகையில் ஆண்டவனை வழிபடலாம் எனத் தெளி வுறுத்துகின்றார் திருமூலர்.

இக் கருத்தினையே சங்ககாலப் புலவராம் பொய்யா நாவிற் கபிலர்,

நல்லவும் தீயவும் அல்ல குவியினர்ப் / புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவ்ை

கடவுள் பேணேம் என்னா ’’ -புறநானுாறு : 1.06 என்கிறார். அதாவது, ‘நல்லதாயினும் தீயதாயினும் அல் லாத, குவிந்த பூங்கொத்தும் புல்லிய இலையும் உடைய எருக்கம் பூவாயினும், ஒருவன் உள்ளன்புடன் குட்டினால், அவற்றைத் தெய்வங்கள் விரும்பி ஏற்குமேயன்றி, யாம் அவற்றை விரும்போம் என்று கூறா’ என்பதாகும். இதனையே ஈழத்துப் புலவரும், தமிழிசை வளர்ச்சித் தொண்டில் தலைப்பட்டுச் சிறந்த யாழ் நூலினை த் தந்தவருமான விபுலானந்தர்.