பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நல்லோர் நல்லுரை

வெள்ளை நிறமல்லிகையோ வேறெந்தமா மலரோ வள்ளல் அடியினைக்கு வாய்த்த மலரெதுவோ வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது ‘ என்றார். (விபுலானந்தத் தேன்)

அடுத்து, யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை’ என்கிறார். மனிதப் பிறவிக்கு நிகரான மாண்புடைய பிறவி பசு எனலாம். ஒரு வீட்டின் சிறப்பு பால் பாக் கியம்’ எனப்பட்டது. போரின் தொடக்கமும் பசுமந்தை கவர்தலாக இருந்தது. மாடு என்ற சொல்லே செல் வத்தை யுணர்த்திற்று. எனவே வாயாற்ற தன் பசி யுணர்த்த முடியாத பசுவிற்குப் புல்லொன் றெடுத்துப் போடுக என்றார் திருமூலர். தம்மோடு தொடர்புடையார் அல்லாதார் மாட்டும் பிறப்பதன்றோ அருள்!

மூன்றாவதாக யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி’ என்றார். பசியென்று வந்தவர்க்குப் புசி” யென்று ஒருபிடி கொடுக்க வேண்டும் என்பர் பெரி யோர். இல்லோர்க்கு இல்லையெனாது வழங்குதலே ஈகை'யாகும். பாரகம் அடங்கலும் பசிப்பிணி யகற்றலே அறத்தில் தலையாய அறமாகும்.

நான்காவதாக, யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே. நம்மிடம் ஏதும் இல்லையென்றாலும் இறைவன் தந்த நாவால் பிறருக்கு இனியவுரை வழங்கலாமன்றோ! எதுவுமற்றவர் வாய்ச் சொல் வழங்கலாமன்றோ!

திருமூலர் பாட்டை முழுமையாகப் பார்ப்போம்: யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம்.உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே. “