பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர்.

10. விளையும் உயிர்

உலகம் உய்யும் நெறி இதுவென்றும், மனிதன் வாழும் நெறி இதுவென்றும் வையத்தில் வற்புறுத்திச் சென்ற சான்றோர் பலராவர். ஊழிபெயரினும் தாம் பெயராத தன்மையுடைய அச்சான்றோர்களால்தான் உலகம் வாழ்ந்து வருகின்றது. அத்தகைய தவமுடைய சான்றோருள் ஒருவர் திருநாவுக்கரசர் ஆவர். தம் தொண்டின் திறத்தாலே தமிழகத்தில் ஒரு விழிப்புணர்ச்சி -ஏற்படுத்திய பெரியவர் இவராவர்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய சான்றோ ராகிய இவர் பிறந்த பதி, திருவாமூர் என்பதாகும். இப் பதியினைத் தெய்வப் புலமைச் சேக்கிழார் பெருமான், ‘சைவ நெறி தலமேழும் பாலிக்குந் தன்மையினால் தெய்வ நெறிச் சிவம்பெருக்குந் திருவாமூர்’ என்று பாராட்டுவார். அத்திருத்தலத்தில், அலகில்கலைத் துறை தழைப்ப அருந்தவத்தோர் நெறி வாழ, உலகில் வரும் இருள் நீக்கி, ஒளிவிளங்கு கதிர்போல் திருநாவுக்கரசர் திருவவதாரஞ் செய்ததாக மேலும் அவர் போற்றுவார்.

பரமன் பதம் பாடிப் பாடித் துதித்தே புகழ் கொண்

டவர் திருநாவுக்கரசர், ‘பாவுற்றலர் செந்தமிழன் சொல்

வளப் பதிகத்தொடை பாடிய பான்மையினால் நாவுக்கர

6