பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 நல்லோர் நல்லுரை

சென்று உலகேழினும் நின் நன்னாமம் நயப்புற மன்னுக’ என்று தடங்கருணைப் பெருங்கடலாம் இறைவனே நாவுக்கரசு என்ற நற்பெயரை வழங்கியருளிய பேறு பெற்றவர் நாவுக்கரசர் ஆவர். வாக்குக்கு ஈசர்-வாகீசர் பெயர் பெற்ற பெருந்தகையார், மெய்யுற்ற திருப்பணி செய்பவராய், விரவுச் சிவ சின்னம் விளங்கிடக் கையில் திகழும் உழவாரப் பெரும்படையுடன் திருத்தொண்டாற் றும் பெருவிருப்புடையவராய்த் திகழ்ந்தார். இவ்வாறு என்ற உள்ளத்தாலும் உடலாலும் இறைவனுக்கும் மக்களுக்கும் ஒரு சேரப் பணிபுரிந்த உயர்குணத்து நல்லோராய் ஒளிர்பவர் நாவுக்கரசராவர்.

இறைவனின் இனிய பண்புகளை எவரும் எளிதில் அறிந்து அவனடிகளைப் போற்றும்வண்ணம் நெறிப் படுத்துவதில் நாவுக்கரசர் முன்னிற்கிறார். அவரது திருப் பாடலைக் காண்போம்:

‘’ திருவே! என் செல்வமே! தேனே! வானோர்

செழுஞ்சுடரே! செழுஞ்சுடர் நற்சோதி! மிக்க உருவே! என் உறவே! என் ஊனே! ஊனின்

உள்ளமே உள்ளத்தின் உள்ளே நின்ற கருவே! என் கற்பகமே! கண்ணே! கண்ணிற்

கருமணியே! மணியாடு பாவாய்! காவாய்! அருவாய வல்வினைநோய்-அடையா வண்ணம்

ஆவடுதண் துறையுறையும் அமரர் ஏறே!’

திருநாவுக்கரசர் பெருமான் இவ்வாறு இறைவனின் பண்பு நலன்களைப் பறைசாற்றிவிட்டு, அவனுடைய படைப்பில் உலக உயிர்கள் அனைத்தும் சமம் என்ற நற் கருத்தை எடுத்து நவில்கின்றார்.