பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நல்லோர் நல்லுரை

வருவது கல்வி, கேட்டலால் வருவது கேள்வி. எனவே தான் திருவள்ளுவர் கற்றிலனாயினும் கேட்க என்றார்.

கற்றுவல்ல அறிஞர் பேசுவதைக் கேட்டாவது, கல்வி பயிலாத ஒருவர் தம் கேள்வியறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். செல்வங்களுள் ஒன்றாகச் செவி யால் கேட்டறியும் கேள்விச் செல்வம் மதிக்கப்பெறும். இக் கேள்விச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும். வாழ்க்கையில் தளர்ச்சி வருமானால் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச்சொற்கள் சேற்று. நிலத்தில் வழுக்காது உதவும் ஊன்றுகோல்போல உதவும். எனவே, கற்றறிந்த அறிஞரிடம் கேட்டுக் கேட்டுக் கேள்விச் செல்வத்தினைப் பெருக்கிக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தலால் காணும் ஒரு பொருள்பற்றி நுட்ப மாக அறியும் ஆற்றல் வந்தமையும்; பின்னர்க் கேள்வி யறிவும் நிறையும். இவ்வாறு உடையவர் பெரும்பாலும் பொருள்களைத் தவறாக உணரமாட்டார்கள். யானைக் கும் அடி சறுக்கும், முக்காலம் உணர்ந்தோரும் மயங்கி நிற்பர்’ எனும் உலகியற் பழமொழிகளின்படி, ஒரு சமயம் பொருள்களைத் தவருக உணர்ந்திருந்தாலும் பேதைமை யான சொற்களைச் சொல்லமாட்டார்கள். வழுக்கியும் வாயால் அறிவற்றனவற்றைச் சொல்ல மாட்டார்கள். கேள்விச் செல்வம் வாய்த்த காரணத்தால் தம்மை அறி யாமையில் அழுந்தியவர் என்று பிறர் கூறிவிடும் அளவில் எத்தகைய சொல்லையும் கூறிவிடாது காப்பர். இத்தகைய நற்பண்பினையே புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலாசிரியர்,

“ உறழா மயங்கி உறழினும் என்றும்

பிறழா பெரியோர் வாய்ச் சொல் ‘ (பு. வெ. 167)

என்று குறிப்பிட்டுள்ளார். வள்ளுவர் இதனையே,