பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நல்லோர் நல்லுரை

“ சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள்

கோத்தி ரமும் குலமும்கொண்டு என்செய்வீர் பாத்தி ரம் சிவமென்று பணிதிரேல் மாத்தி ரைக்குள் அருமாற் பேறரே ‘

இவ்வாறு ஒரு குலம், ஒரு நிறையானவர்கள் அடுத்துச் செய்யத்தக்கது என்ன என்பது குறித்தும் நாவுக்கரசர் பெருமான் நலமுற நவில்கின்றார். நாவுக்கரசர் பிறருக்கு உதவும் பெருமனம் படைத்த வேளாளர் குடியில் பிறந்து, பலருக்கும் பயன்படும் பயன்மரமான வாழ்வு வாழ்ந்தவர். உழவர்குடிப் பெருமகனாராகப் பிறந்து, உழவாரப் பணியே தம் இடையறாத உயர்பணியாகக் கொண் டொழுகிய உத்தமராகிய அவர், உலக மக்கள் இறை யருளை எய்தப்பெற-சிவகதி சேர எளிய வழி எது வென்றும் தேர்ந்து தெளிவிக்கின்றார். சிவகதி-அதாவது சிவனருள் இறையருள் என்னும் நெற்கதிர்களை நிறையப் பெற வேண்டுமேயானால் மெய்ம்மை என்ற உழவை மேற் கொள்ளவேண்டும். நிலம் உழப்பட்ட பின்னர் அந் நிலத்தில் அன்பு என்னும் அரிய விதையை ஊன்றி விதைக்க வேண்டும். அவ்வயலில் வித்து முளை கிளம்பிப் பயிர்முகம் கா னு ம் அளவையில் அவற்றோடு பொய்ம்மை” என்னும் களையும் விளையலாம். அப் பொய்ம்மை என்னும் களையினை வேரோடு வெட்டியெறிய வேண்டும். பின்னர்ப் பொறுமை என்னும் நீரைப் பாய்ச்சி, தகுதி என்னும் நல்ல பண்பாகிய வேலியைக் காவலாகப்போடவேண்டும். நல்ல வழியிலே நடத்தலாகிய செம்மை என்னும் நெறியிலே நீங்காது நிற்க வேண்டும். இவ்வாறு நின்றால் சிவகதி எனும் தானிய மணிக் கதிரைத் தடையின்றிப் பெறலாம் என்கிறார் சால்பிற்குக் கட்டளையாகி நெறி நின்ற தூயோராம் திருநாவுக்கரசர் பெருமான்.