பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர்

---

11. ஆனந்த வெள்ளம்

உலகிடைத் தோன்றி வளர்ந்து செழித்து வாழ்ந்த மொழிகள் பல; இன்றளவும் வாழ்ந்துவரும் மொழிகள் சில; அவற்றிலும் இலக்கிய இலக்கணச் செல்வங்களை இடையறாது பெற்று, அதனால் வளம்பெற்று இன் றளவும் உயர்தனிச் செம்மொழியாய் விளங்கும் மொழி தமிழாகும். ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றும், இலத்தின் சட்டத்தின் மொழி என்றும், கிரேக்கம் இசை யின் மொழி என்றும், ஜெர்மன் தத்துவத்தின் மொழி என்றும், பிரெஞ்சு தூதின் மொழி என்றும், இத்தாலியன் காதலின் மொழி என்றும் அறிஞர் பெருமக்களால் கூறப் படுவது போன்று தமிழ் இரக்கத்தின் மொழி என்றும் பக்தியின் மொழி என்றும் பாராட்டப்பெறுகின்றது. அளவிலும் சுவையிலும் தமிழிலுள்ள திருப்பாடல்கள் போல் பிற இலக்கியத்தில் இல்லை என்பர் ஆராய்ச்சி யாளர்.

தமிழோடு இசை பாடல் மறந்தறி யாதவர்களான சமய குரவர்கள் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி’ப் பாடிய பாடல்கள் கல்நெஞ்சினையும் கணிவிப்பனவாகும். ஒருவாத புகழுடைய திருவாதவூரில் பிறந்து, அரிமர்த்தன பாண்டியனிடம் தென்னவன் பிரமராயன்’ என்ற விருதுப் பெயர் பெற்று அமைச்சராக விளங்கி, மன்னன்