பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்த வெள்ள ம் - 91

பொருட்டுக் குதிரை வாங்கச் சென்றபொழுது திருப் பெருந்துறையில் இருந்த மரத்தடியில் குரு வடிவில் இருந்த சிவபிரானைக் கண்டு சித்தம் பறிகொடுத்து , ஏற்ற பணியினை மறந்து இறைவன் திருத்தொண்டு செய்து, அதனால் அரசனின் ஒறுப்பிற்கு ஆளாகி, இறுதி யில் இறைவனின் திருவடிநீழலை அடைந்தவர் மாணிக்கவாசகர் ஆவர்.

இறைத்தொண்டிலே திளைத்து உயர்வாழ்வு வாழ்ந்து ஒளிநெறி காட்டிய பெருமக்களாகத் தேவார மூவரையும், திருவாசகம் தந்த மாணிக்கவாசகரையும் குறிப்பர். இந்நால்வரினும் சம்பந்தர் தலையாயவர் என்றும், ஆயினும் அவர் இறையருளை இளமையிலேயே பெற்றவர் என்றும், சுந்தரர் சம்பந்தரினும் சிறந்தவர் என்றும், ஆயினும் அவர் உலகியல் வாழ்கையிற் பெரிதும் உழன்றவர் என்றும், ஆதலின் அவரினும் விழுமியவர் திருநாவுக்கரசர் என்றும், அவரும் தாம் வாழ்ந்த எண்பத் தோர் ஆண்டுகளிற் பெரும்பகுதியினை அறிவுநெறி யிலும், எஞ்சிய சில ஆண்டுகளைப் பக்திநெறியிலும் செலுத்தியவர் என்றும், எனவே, மாணிக்கவாசகரே உலக அனுபவம் நிரம்பப் பெற்று, மக்கள் மனம் உருக வைக்கும் திருப்பாடல்களை நிரம்பப் பாடியவர் என்றும் அறிஞர் ஆராய்ச்சிகள் கொண்டு உரைப்பார்.

‘திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது தொன்றுதொட்டுத் தமிழகத்தே நிலவி வரும் பழமொழியாகும். ‘திருவாசகத்தை ஒருமுறை ஒதினால் போதும். கருங்கல் மனமுடையவராயிருந்தாலும் அவர் மனம் கரையும். நீர்க்கேணியில் ஊறும் ஊற்றைப் போல ஆனந்தக் கண்ணிரைப் பெருக்கி நிற்பர்’ என்கிறார் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்.