பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்த வெள்ளம் 95.

வாடுவேன்; பேர்த்தும் மலர்வேன்; அனலேந்தி ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய்.”

-திருஅம்மானை: 17

இறைவனைத் தொழும்பொழுது ஏற்படும் உருக்கமே சிவன் கழல் சேர்க்கும் நீர்மைத்து என உளமார எண்ணி னார் மணிவாசகப் பெருந்தகையார். கசிந்து கசிந்து உருகி உருகி நிற்கும் நிலையினை அவர்தம் திருப்பாடல் களில் காணலாம். பக்திவலையிற் படும் ஈசனின் திறத் தினைப் பின்வருமாறு கூறுவர் :

“மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து

உன் விரையார் கழற்குஎன்

கைதான் தலைவைத்துக் கண்ணிர்

ததும்பி வெதும்பி, உள்ளம்

பொய்தான் தவிர்ந்து உன்னைப்

போற்றி சயசய போற்றி என்னும்

கைதான் நெகிழ விடேன்;

உடையாய் என்னைக் கண்டுகொள்ளே.’

-திருச்சதகம்: 1

‘என்னை அடைக்கலமாக ஏற்றருள் செய்தவனே! நின்பெருங் கருணைத் திறத்தை நினைந்து உடம்பு தானே மயிர்க்கூச்செறிந்து நடுநடுங்க, உனது வாசனை பொருந் திய திருவடிகளை வணங்குவதற்கு எனது கைகள் தாமே தலைமேற் கூம்பப்பெற்றுக் கண்களினின்று ஆனந்த வெள்ளம் நிரம்ப, மனமானது ஆர்வத்தால் வெப்பமு டைத்ததாக நிலையற்றவற்றின் பற்றுத் தானே நீங்கி யொழிய உனக்கு வணக்கம், வெற்றி வெற்றி வணக்கம் என் றியம்பும் ஒழுக்கத்தையே நழுவ விடாது மேற் கொண்டு நிற்பேன். அடியேனைக் கண்பார்த்து ஏற்றுக் கொள்ளுக."