பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 நல்லோர் நல்லுரை

இவ்வாறு உடலும் உள்ளமும் உருகி நிற்கும் தனது அன்பு நிலையை மணிவாசகப் பெருந்தகையார் படம் பிடித்துக் காட்டுகின்றார். -

உற்றாரையும் ஊரையும் பேரையும் கற்றாரையும் வேண்டாது, குற்றாலத் தமர்ந்துறையும் கூத்தபிரானின் குரைகழற்கே கன்றை ஈன்ற தாய்ப்பசுவின் மனம்போலக் கசிந்து உருகுவதனையே வேண்டி நிற்கிறார் திருவாசகம் என்னும் தித்திக்கும் திருமறையைத் தந்த திருவாதவூர ராம் மாணிக்கவாசகர்.

“உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன்

பேர்வேண்டேன் கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனியமையும் குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாவுன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே.”

-திருப்புலம்பல்: 3.

‘இவ்வாறு பக்திநெறியில் நிற்கும்பொழுது பேரின்பம் பெருகுகின்றது, தொன்றுதொட்டுச் சூழ்ந்து வந்த இருள் எங்கோ ஒடி மறைந்தது. அதனால் இடை யீடின்றித் தொடர்ந்து வந்த துன்பம் அறவே அகன் றது. இருட்டறையாக இருந்த இதயம் அன்பு மலிந்த பேரூராக மாறி விட்டது. இவையாவும் குருந்த மரத்தின் கீழமர்ந்த திருப்பெருந்துறைப் பெருமானின் திருவரு ளால் விளைந்தனவே ஆகும்’ என்கிறார் மணிவாசகர்.

இன்பம் பெருக்கி இருள் அகற்றி எஞ்ஞான்றும் * -

துன்பம் தொடர்வறுத்துச் சோதியாய்-அன்புமைத்து) சீரார் பெருந்துறையான் என்னுடைய சிங்தையே ஊராகக் கொண்டான் உவந்து.’

-திருவெண்பா: 1.1,