பக்கம்:நல்ல எறும்பு.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அது கண்ட அவன் தாய் “அப்பா அப்படி நடக்காதே” என்றாள்.

அதற்கு அவன், “நடந்தால் உனக்கென்ன ?” என்றான்.

அப்போது அவன், “அப்பா நீ நொண்டியாகி விடுவாய்” என்றாள்.

அ த ற் கு ம் அவன், “ஆகில் உனக் கென்ன ?” என்றான்.

சில மாதங்கள் சென்றன. பிறகு அவன் காலினைக் குணப்படுத்த அவன் தந்தை எவ்வளவோ முயன்றார். அவன்

கால் குணமடையவே இல்லை. முடிவில் அவன் கையில் கோல் கொண்டு நொண்டி நடக்க ஆரம்பித்தான். அ ன் று மு த ல் அவனை எல்லோரும் “நொண்டி நொண்டி” என்றே அழைக்க ஆரம்பித்தார்கள். அப்போது அவன் மிகவும் வருந்தினான்.

29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_எறும்பு.pdf/35&oldid=1525808" இலிருந்து மீள்விக்கப்பட்டது