பக்கம்:நல்ல எறும்பு.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நல்ல எறும்பு



1

ஓர் ஊரில் ஒரு சிறு எறும்பு இருந்தது. அது மிகவும் நல்ல எறும்பு. குழந்தைகளைக் கண்டால் அதற்கு மிகவும் ஆசை. குழந்தை அழுதால் அது அங்கே போய் விளையாடும். அப்போது அந்தக் குழந்தை அழாமல் வேடிக்கை பார்க்கும்.

பள்ளிக்கூடம் போகும் சிறுவர்களைக் கண்டாலும் அந்த எறும்புக்கு மிகவும் விருப்பம். ஆனால், அவர்கள் தப்பிதம் செய்தால் அதற்குக் கோபம் வரும். அது அப்போது அவர்களைக் கடிப்பதும் உண்டு.

அந்த எறும்பு ஒரு சிறுவன் வீட்டுக்குச் சென்றது. அவன் பெயர் கோவிந்தன். அவன் நன்றாகப் பல் துலக்குவதில்லை :

1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_எறும்பு.pdf/5&oldid=1525810" இலிருந்து மீள்விக்கப்பட்டது