பக்கம்:நல்ல கதைகள்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பெருங்காய டப்பாவை எடுத்துப் பார்த்தாள். பேரிடி அவளுக்காகக் காத்திருந்தது. மனம் பகீரென்றது அவளுக்கு. படபடப்புடன் அங்குமிங்கும் ஓடினாள். பணத்தைத் தேடினாள், பதறினாள், அழுதாள், அலறினாள்.

என்ன செய்து என்ன பயன்? போன ரூபாய் திரும்புமா?

அரிசி வியாபாரியோ அவசரமாகப் போக வேண்டும் என்று குரல் கொடுத்தான். ஒரு படி அரிசி விற்க இவ்வளவு நேரமானால் நான் உருப்பட்ட மாதிரிதான் என்று பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசிய வாறு மீண்டும் அவளை அழைத்தான்.

வேகமாக வந்த கண்ணனின் தாய், வியாபாரியை நோக்கி பணம் காணாமல் போனதை விம்மலுடன் கூறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/21&oldid=1081115" இலிருந்து மீள்விக்கப்பட்டது